www.garudabazaar.com

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தேடிவந்து..”.. மறைந்த கலை இயக்குநர் சந்தானம்.. வசந்தபாலன் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சந்தானம். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vasantha Balan over Art director santhanam demise

முன்னதாக இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தார். மேலும் இவர், சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று படத்திற்கும் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இதிலும் கலை இயக்குனராக சந்தானம் பணிபுரிந்திருந்தார். அதுமட்டும் அல்லாமல், மகான், ஜகமே தந்திரம், சர்கார் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் மாரடைப்பால் சந்தானம் மரணமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய மறைவையடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இந்த மறைவு குறைத்து தமது சமூக வலைதளப்பக்கத்தில், “நேற்றிரவு திரைப்படக் கலை இயக்குநர் சந்தானம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

காவியத்தலைவன் திரைப்படத்தில் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்தார். பழைய நாடக நடிகர் ஆர்.எஸ்.மனோகர் துவங்கி பல நாடகக் கம்பெனிகளில் ஏறி இறங்கி நாடகக்குழுவிற்கு தேவையான அத்தனை நாடகப்பொருட்கள், விளம்பர நோட்டீஸ்கள், திரைச்சீலைகளைச் சேகரித்து வந்தார். பீரியட் படம் என்பதால் பார்த்து பார்த்து அக்கறையுடன் வேலை செய்தார். காவியத்தலைவன் திரைப்படத்தை தமிழக அரசு விருதுக்கு அனுப்ப நான் சோம்பிக் கிடந்த போது அவரே விருப்பப்பட்டு அனைத்து வேலைகளையும் செய்து அனுப்பி வைத்தார்.

காவியத்தலைவன் திரைப்படத்திற்கு சிறந்த கலை இயக்குநர் விருது உட்பட 10 விருதுகள் கிடைத்தன. தமிழக அரசு விருதுடன் என் படப்பிடிப்பு தளத்திற்கு தேடி வந்து எனக்கு நன்றி கூறி ஆரத்தழுவி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆயிரத்தில் ஒருவன் உட்பட இயக்குநர் செல்வராகவனின் திரைப்படங்கள், இயக்குநர் முருகதாஸின் சமீபத்திய அத்தனை திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணி புரிந்தவர். என் கண்ணீர் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

Vasantha Balan over Art director santhanam demise

People looking for online information on G Vasanthabalan, T Santhanam will find this news story useful.