www.garudabazaar.com

ஆயிரத்தில் ஒருவன், சர்கார், தர்பார் பட கலை இயக்குநர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கலை இயக்குனரான சந்தானம் இன்று மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sarkar Darbar Art Director T Santhanam Passed away

தமிழ் சினிமாவில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சந்தானம். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தார். மேலும் இவர், சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று படத்திற்கும் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இதிலும் கலை இயக்குனராக சந்தானம் பணிபுரிந்திருந்தார்.

அதுமட்டும் அல்லாமல், மகான், ஜகமே தந்திரம், சர்கார் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் மாரடைப்பால் சந்தானம் மரணமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய மறைவையடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sarkar Darbar Art Director T Santhanam Passed away

People looking for online information on Art director, T Santhanam will find this news story useful.