www.garudabazaar.com

வாரிசு படத்தின் முக்கிய 3 ஏரியா உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Varisu North South Arcot Salem Area Theatrical Rights

Also Read | அரசு விழாவில் நடனமாடி அசத்திய நடிகையும் அமைச்சருமான ரோஜா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu North South Arcot Salem Area Theatrical Rights

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Varisu North South Arcot Salem Area Theatrical Rights

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சேலம், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியாக்களின் தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | நாக சைதன்யாவின் புதிய படத்தின் போஸ்டர் டிசைனர் இவரா? வைரலாகும் வெங்கட் பிரபு 'டச்'!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu North South Arcot Salem Area Theatrical Rights

People looking for online information on Thaman, Varisu, Varisu Movie Update, Vijay will find this news story useful.