RRR Others USA
www.garudabazaar.com

#Willsmithassault: "இதான் தைரியம்... உங்க ரசிகைங்குறதுல பெருமை"… வனிதா போட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில் சக நடிகரை அறைந்தது குறித்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Vanitha vijaykumar felt proud of will smith fan

மாமன்னன் படத்தின் அடுத்த அப்டேட்… தெறி போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Bodyshaming ஜோக்கும் எதிர்வினையும்…

நேற்று நடந்த 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நடந்து உலகளவில் கவனத்தைப் பெற்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை அறிவிக்க வந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பின்கெட் ஸ்மித்தின் தலைமுடிப் பற்றிய ஒரு ஜோக்கை கூறினார் (ஒரு உடல்நலப் பிரச்சனைக் காரணமாக பிங்கெட்டின் தலைமுடி சமீபகாலமாக உதிர்ந்துவருவதால் அவர் மொட்டை அடித்திருந்தார்). இதை முன் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித் தம்பதிகள் ரசிக்கவில்லை. இதனால் கோபமான வில் ஸ்மித் மேடையில் ஆவேசாமாக ஏறிச் சென்று கிறிஸ் ராக்கை பளார் என அறைந்தார். பின்னர் கோபமாக ‘என் மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்துங்கள்’ எனக் கத்திவிட்டு தனது இருக்கைக்கு சென்றார்.

Vanitha vijaykumar felt proud of will smith fan

ஆதரவும் எதிர்ப்பும்…

வில் ஸ்மித் செய்தது சரி என்று ஒரு தரப்பினரும்,  என்ன நடந்திருந்தாலும் அவர் வன்முறையில் ஈடுபட்டு இருக்க வேண்டாம் என்று மற்றொரு தரப்பினரும் இது சம்மந்தமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல விவாதங்கள் சமூகவலைதளங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் வில் ஸ்மித் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ வன்முறை என்பது எந்த  வடிவில் இருந்தாலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. ஆனால் என் மனைவியின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அதற்கு நான் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றினேன்.

கிறிஸ் ,நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது எல்லையைத் தாண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வெட்கப்படுகிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. இதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் ஒரு அழகான நிகழ்வாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என வருத்தம் தெரிவித்திருந்தார்.

Vanitha vijaykumar felt proud of will smith fan

வனிதா விஜயகுமாரின் பதிவு…

இந்நிலையில் தமிழ் நடிகையான வனிதா விஜயகுமார் இந்த சர்ச்சை சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.  வில் ஸ்மித் அறிக்கையைப் பகிர்ந்துள்ள அவர் அதில் ‘தனது மனைவியைக் காக்கும் தைரியம்… அதுபோல தனது தவறை தைரியமாக ஒத்துக்கொள்ளும் பண்பு… நான் உங்களின் மிகப்பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்’ எனக் கூறி தனது ஆதரவை அளித்துள்ளார்.

மற்றொரு முன்னணி நடிகையான சமந்தா ‘வில் ஸ்மித் இந்த விவகாரத்தை உடல் ரீதியான தாக்குதலை தவிர்த்து வேறு விதத்தில் கையாண்டு இருக்கலாம்’ எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர், காஜல், அதிதி நடிச்ச “ஹே சினாமிகா” ஓடிடியில்.. வெளியான ரிலீஸ் தேதி ரிலீஸ் தேதி

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha vijaykumar felt proud of will smith fan

People looking for online information on வனிதா விஜயகுமார், வில் ஸ்மித், Oscar 2022, Vanitha Vijaykumar, Will Smith, Will smith assault will find this news story useful.