ரஜினி 168 : போட்றா வெடிய... சூப்பர்ஸ்டாருடன் மீண்டும் இணையும் டாப் நடிகை இவர் தான்!
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ரஜினி168 படத்தில் நயன்தாரா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்பார் திரைப்படத்தை அடுத்து ரஜினி நடித்து வரும் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், தலைவர்168-ல் நயன்தாரா இணைவதாக தெரிவித்துள்ளனர். ரஜியுடன் நயன்தாரா இதற்கு முன் சந்திரமுகி, குசேலன், தர்பார் உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து கலக்கினார். இப்போது இந்த படத்திலும் நயன்தாரா இணைத்திருப்பதன் மூலம் படத்தின் மீதிருந்த எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது.
Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020