www.garudabazaar.com

பிரபல OTT-க்காக ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் THE GREY MAN.. படக்குழு வெளியிட்ட அடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை, 11 ஜூலை, 2022- ருஸ்ஸோ பிரதர்ஸ், ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ, மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான படங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

THE GRAY MAN DIRECTORS RUSSO BROTHERS ARE COMING TO INDIA SOON

Also Read | ஈபிள் டவரை சுற்றிப்பார்த்த அஜித்.. Autograph & ஃபோட்டோவால் ரசிகர்கள் உற்சாகம்.. பரவும் Video!

நெட்ஃபிலிக்ஸ்-ல் ஒரு அதிரடி நிரம்பிய படைப்பான - தி கிரே மேன் உடன் மீண்டும் வருகிறார்கள். இதில், தனுஷுடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் - நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் உள்ள ரசிகர்களை படைப்பாளர்கள் ரூசோ பிரதர்ஸ் உடன் நெருக்கமாக்கவுள்ளது – ஆம் நீங்கள் படித்தது உண்மைதான்.

இந்தியாவில் நடைபெறும் தி கிரே மேன் பிரீமியரில் ரசிகர்களை சந்திக்க இயக்குனர் இருவரும் விரைவில் மும்பையில் சூப்பர் ஸ்டார் தனுஷுடன் சேர உள்ளனர். தங்கள் இந்திய ரசிகர்களுக்கான ஒரு வீடியோ செய்தியை ருஸ்ஸோ சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர், "அனைவருக்கும் வணக்கம்! நான் ஜோ ருஸ்ஸோ மற்றும் நான் ஆன்டனி ருஸ்ஸோ, எங்களின் புதிய படமான ‘தி கிரே மேன்’ படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா, விரைவில் சந்திப்போம்.”

தி கிரே மேன் படத்தின் அனுபவம் பற்றிப் பேசிய தனுஷ் அவர்கள், "இது அற்புதமாக உள்ளது. இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸ் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று கூறினார்.

உங்கள் நாள்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள், ஜூலை 22 அன்று நெட்ஃபிலிக்ஸில் கிரே மேன் வெளியாகிறது.

THE GRAY MAN DIRECTORS RUSSO BROTHERS ARE COMING TO INDIA SOON

இயக்குனர்கள் அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில், எழுத்தாளர்கள்: ஜோ ருஸ்ஸோ, கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியுள்ளனர். தயாரிப்பாளர்களாக ஜோ ரோத், ஜெஃப்ரி கிர்சென்பாம், அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, மைக் லரோக்கா, கிறிஸ் காஸ்டால்டி செயல்பட்டுள்ளனர். நிர்வாக தயாரிப்பாளர்கள்: பேட்ரிக் நியூவால், கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி, ஜேக் ஆஸ்ட், ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட், ஜெஃப் ஹேலி, சாக் ரோத் மற்றும் பாலக் படேல்

மார்க் கிரேனியின் தி கிரே மேன் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. நடிகர்களாக ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மௌரா, தனுஷ், பில்லி பாப் தோர்ன்டன், ஆல்ஃப்ரே வுடார்ட், ரெஜி-ஜீன் பேஜ், ஜூலியா பட்டர்ஸ், எமி இக்வுகோர், ஸ்காட் ஹேஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Also Read | பிரபல நடிகர் வெளியிட்ட PONNIYIN SELVAN படத்தின் BTS போட்டோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

THE GRAY MAN DIRECTORS RUSSO BROTHERS ARE COMING TO INDIA SOON

People looking for online information on Dhanush, India, Russo Brothers, The Gray Man will find this news story useful.