Pattamboochi

தளபதி என்ட்ரி செதறு செதறு.. வெளியாகிய THALAPATHY-66 படத்தின் மெர்சலான தலைப்பு! மாஸான FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பும் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Thalapathy66 Vijay Movie First Look Poster and Title Released

Also Read | PBS & தன்யாவுடன் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் .. போஸ்டருடன் வெளியான கொலமாஸ் தகவல்!

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy66 Vijay Movie First Look Poster and Title Released

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்க உள்ளார்.

இவர்கள் போக நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Thalapathy66 Vijay Movie First Look Poster and Title Released

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டருடன் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்யின் 48வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read | அகற்றப்பட்டதா கால் விரல்? கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy66 Vijay Movie First Look Poster and Title Released

People looking for online information on Thalapathy 66 Movie, Thalapathy 66 Movie First Look Poster, Thalapathy 66 Movie Title, Thalapathy Vijay will find this news story useful.