''அந்த படத்துக்கு பிறகு நான் தொடர்ந்து நடிப்பேன்னு நினைக்கல'' - தல அஜித்தின் Throwback பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு நடிகராக ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், தன் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்வில் சாதித்து அவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருகிறார்.

Thala Ajith's throwback interview about his film career goes viral | தனது படங்கள் குறித்து தல அஜித்தின் பேட்டி வைரல்

தல அஜித் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிப்பதை கடந்த சில வருடங்களாக தவிர்த்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலங்களில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்திருக்கிறார். அவை தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி அவர் 'அமர்களம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ரெடிஃப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், ''எனது 6வது படமான ஆசை'க்கு பிறகு நான் தொடர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் 'ஆசை' படம் வெளியாகி மாபெரும் ஹிட். என் கடன்களை அடைத்து பிறகு மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தேன்.

நான் கிரிக்கெட்டில் தீவிரமாக முயற்சித்தேன். அது நடக்கவில்லை. அதன் பிறகு ரேஸிங்கில் பங்கு பெற நினைத்தேன். ஆனால் என் முதல் படம் வெளியானதும் விபத்தில் சிக்கினேன்.அதன் காரணமாக என்னால் ரேஸிங்கில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை'' என்று தெரிவித்தார்.

Entertainment sub editor