''Warning ! அது நான் இல்ல'' - தல அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குநர் அதிரடி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது தடத்தை அழுத்தமாக பதித்தவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து தல அஜித்துடன் 'பில்லா' படத்தில் இணைந்தார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

Thala Ajith's Super Hit Movie director clarifies his fake facebook Account ft Vishnuvardhan | தல அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குநர் போலி பக்கங்கள் குற

ஸ்டைலிஷான தல அஜித், வியத்தகு டெக்னிக்கல் அம்சங்கள் என ஒரு பிரம்மாண்டமான பில்லாவை தந்து சூப்பர் ஹிட்டாக்கினார். அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் 'சர்வம்', மீண்டும் தல அஜித்துடன் 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது ஹந்தியில் 'ஷேர்ஷா' (Shershaah) என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தொடர்பான வதந்தி ஒன்றிற்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக விளக்கமளித்துள்ளார். அதில், எச்சரிக்கை, நான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இல்லை. இந்த இரண்டு பக்கங்களும் போலியானவை. யாரோ ஒருவர் என் பெயரில் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பக்கங்களை பின்தொடராதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Thala Ajith's Super Hit Movie director clarifies his fake facebook Account ft Vishnuvardhan | தல அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குநர் போலி பக்கங்கள் குற

People looking for online information on Facebook, Fake account, Vishnuvardhan will find this news story useful.