“சூப்பர் ஸ்டார் அஜித் படத்தை மிஸ் பண்ணிட்டேன்..” - பிரபல பாலிவுட் நடிகை வருத்தம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 24, 2019 11:55 AM
நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர், ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘தல 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா, “கால் ஷீட் பிரச்சனை காரணமாக சூப்பர் ஸ்டார் அஜித் நடித்த தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில்ல் ‘சிங் சாப்’ படத்தின் மூலம் அறிமுகமான ஊர்வசி, ‘கிரேட் கிராண்ட் மஸ்தி’, ‘காபில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.