நேர்கொண்ட பார்வை முதல் Preview Show - படம் எப்படி இருக்கு? எதிர்ப்பார்ப்பு எகிறுதா..?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 02, 2019 01:14 PM
'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. அமிதாப் பச்சனின் 'பிங்க்' ரீமேக்கான இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
![Thala Ajith Nerkonda Paarvai Celebrity Show At Chennai Thala Ajith Nerkonda Paarvai Celebrity Show At Chennai](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thala-ajith-nerkonda-paarvai-celebrity-show-at-chennai-photos-pictures-stills.png)
இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. போனி கபூர் பிரபலங்களுக்கு மட்டும் படத்தை ஸ்பெஷலாக திரையிட்டு காட்டியுள்ளார். சென்னையில் உள்ள Four Frames Preview Theatre படம் காட்டப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர், அர்ஜுன் கபூர், அருண் விஜய், தீபக், கார்த்திக் ஸ்ரீனிவாஸ் போன்ற பிரபலங்கள் பார்த்துள்ளனர்.
படத்தை பார்த்தவர்கள் அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போனதாகவும் விமர்சனமும் மாஸாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
#thalaajith #naerkondapaarvai preview show by #boneykapoor #arjunkapoor thanks #sanjayramaswamy .Great movie .Treat for #thala #ajith fans @arunvijayno1 @sskarthik #karthiksrinivasanphotography #karthiksrinivasan #naerkondaparvai #pink #pinkmovie #thalaajithfans @arjunkapoor pic.twitter.com/D95Y40YyF6
— karthik srinivasan (@sskarthik) August 2, 2019