Official: அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் தமிழகத்தில் வெளியிடும் விநியோகஸ்தர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thala Ajith's Nerkonda Paarvai TN distributors Boney Kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும்  ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தை ஜி.ஸ்ரீனிவாசனின் ‘எஸ்.பிக்சர்ஸ்’, கே.ராஜாமன்னாரின் ‘கந்தசாமி ஆர்ட்ஸ் செண்டர்’ மற்றும் ராகுல் ஆகியோர் தமிழகத்தில் வெளியிடுகின்றனர் என்பதை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் பூஜை ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.