''தல அஜித்துக்கு அந்த படம் ஓடுமானு டவுட்...'' - பிரபல நடிகர் சொன்ன சுவாரஸியத் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சைக்கோ' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Thala Ajith Kumar, Red, Popular actor and director Singam Puli Speaks about his experience

இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையில் உன்ன நெனச்சு, நீங்க முடியுமா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சிங்கம்புலி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது தல அஜித்தை வைத்து டைரக்ட் செய்த 'ரெட்' படம் குறித்து பேசிய அவர், ''சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'உன்னைத் தேடி' திரைப்படத்துக்கு சுந்தர்.சியுடன் இணைந்து நான் கதை எழுதினேன்.

அந்த படம் நடிக்கும் போது இந்த படம் ஓடுமானு அஜித்துக்கு டவுட் இருந்தது. அப்போ நான் சொன்னன். இந்த படம் ஓடுனா உங்கள நான் சந்திப்பேன். இல்லனா, சினிமாவுல நான் ஏதொவொரு மூலையில இருப்பேன்.

அதே மாதிரி படம் முடிஞ்சு அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சு, பெட்ல இருந்து தான் அந்த படத்துக்கு டப்பிங் பேசுனாரு. அப்போ என்கிட்ட இந்த படம் ஓடுச்சுனா நாம படம் பண்ணலாம்னு சொன்னாரு. அதே மாதிரி அந்த படத்தோட 100வது நாள் விழாவில், அதனை உறுதி செய்தார். அந்த படம் தான் ரெட்'' என்றார்.

Entertainment sub editor