www.garudabazaar.com

"சூர்யா40" படத்தின் FirstLook எப்போ?.. வீடியோவுடன் வெளியான அசத்தலான அறிவிப்பு! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுக்கு தயாராக உள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘நவரசா’ படம் உட்பட, நடிகர் சூர்யா தற்போது பல படஙகளை கைவசம் வைத்துள்ளார்.

suriya40 firstlook official date announced mass video

கௌதம் மேனன் இயக்கும் இந்த பகுதிக்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் first look போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா40’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.  நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் நடிகை பிரியங்கா அருள் மோகன், சூர்யா40 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சூர்யா40 திரைப்படத்தின் தலைப்பு வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும், டைட்டில் மற்றும் first look அப்டேட்டுக்கு ஜூலை வரை காத்திருக்குமாறும் இயக்குநர் பாண்டிராஜ் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தான், இந்த படத்தின் first look போஸ்டர், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதியை முன்னிட்டு,  அவரது பிறந்தநாளுக்கு முதல் நாளான ஜூலை 22 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு, ஒரு குட்டி வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் 'கலக்கப் போகும்' ஆண்ட்ரியா - வெற்றிமாறன் கூட்டணி!!... வந்தாச்சு மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

suriya40 firstlook official date announced mass video

People looking for online information on D Imman, Pandiraj, Sun pictures, Suriya, Suriya40, Suriya40firstlook will find this news story useful.