சூர்யாவின் சூரரைப் போற்று : வெளியானது மண்ணுருண்ட பாடல்.! ஜிவிபிரகாஷ் மரணக்குத்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் இருந்து மண்ணுருண்ட என்கிற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று மண்ணுருண்ட பாடல் இதோ | suriya gvprakash sudha kongara's soorarai poottru mannurunda song is out

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் சூரரைப் போற்று படத்தில் இருந்து வெளியான வெய்யோன்சில்லி பாடல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தற்போது மண்ணுருண்ட என்கிற பாடல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபோக் ஜானரில் உருவாகியிருக்கும் இப்பாடலை கவிஞர் ஏகாதேசி எழுதியுள்ளார். பாடகர் செந்தில் கனேஷ் இப்பாடலை பாடியுள்ளார். மேலும் இப்பாடலில் மேக்கிங்கோடு சேர்த்து இந்த லிரிக் வீடியோ உருவாகியுள்ளது. இதனிடையே சூர்யாவின் இத்திரைப்படம் வரும் மே மாதம் முதல் தேதியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று : வெளியானது மண்ணுருண்ட பாடல்.! ஜிவிபிரகாஷ் மரணக்குத்து. வீடியோ

Entertainment sub editor