'அன்பை விதைப்போம்' - சூர்யாவுக்கு ஆதரவாக டாப் ஹீரோக்களின் ரசிகர்கள்.. அதிரும் சோஷியல் மீடியா.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் ட்விட்டரில் மாஸ் ட்ரெண்டிங் அடித்து வருகிறார்கள். 

சூர்யாவுக்காக குரல் கொடுக்கும் பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் | popular heroes fans supports suriya over twitter in anbai vidhaippom tah

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். இதனிடையே சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, கோவில்களை போல மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரிக்க வேண்டும் என பேசினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு ஒரு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு வர, ஜோதிகாவுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர். 

இந்நிலையில் சூர்யா இன்று அவரது தரப்பில் இருந்து ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில் மதங்களை கடந்த மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். பள்ளிகள், மருத்துவமனைகள் இறைவன் உறையும் இடமாக கருதவேண்டும் என அவர் ஜோதிகாவுக்கு ஆதரவாக தன் நிலைப்பாட்டை தெரிவித்தார். இதையடுத்து ட்விட்டரில் சூர்யாவுக்கு ஆதரவாக 'அன்பை விதைப்போம்' எனும் ஹாஷ்டாக் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்களும் இணைந்து அவரக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் சூர்யாவின் பக்கம் உறுதியாக நிற்பதாகவும் ட்வீட் செய்து வருகிறார்கள். 

 

Entertainment sub editor