'நேர்கொண்ட பார்வை'யில் நடித்ததற்காக தல அஜித்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 11, 2019 09:37 PM
போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் ஜோடியாக நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குறித்து பல்வேறு திரைபிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் சூர்யாவும் ஜோதிகாவும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பாராட்டி நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் வினோத்திற்கு பொக்கே மற்றும் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே 'ஜாக்பாட்' படம் தொடர்பாக ஜோதிகா Behindwoods TVக்கு அளித்த பேட்டியில், ''மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டு அஜித் சார் 'நேர்கொண்ட பார்வை'யில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது. விஸ்வாசம் போன்று நூறு கோடி வசூல் செய்த படங்களை ஒப்பிடுகையில் இது சிறிய படம். அவரை நிறைய ரசிகர்கள் பின்தொடருகிறார்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
'நேர்கொண்ட பார்வை'யில் நடித்ததற்காக தல அஜித்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா வீடியோ