தல அஜித்தின் 60வது படத்தில் வில்லனாகிறாரா அருண் விஜய் ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 09, 2019 10:17 AM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், திரிஷா, அனுஷ்கா, பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் வில்லனாக விக்டர் என்ற கேரக்டரில் நடித்து மிரட்டினார் அருண் விஜய். அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் நடிகர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தல அஜித் - வினோத் இணையும் தல 60 படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடிக்கவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் அந்த செய்திகளில் உண்மையில்லை என்று எங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags : Arun Vijay, Ajith Kumar, Thala 60