நீ ஏன் சந்திரமுகியா மாறுற? - ஜோதிகாவின் ஜாக்பாட் செம காமெடி வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 29, 2019 04:22 PM
2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ஆனந்த குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து சீரோ சீரோ என்ற வீடியோ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து காமெடி காட்சி வெளியாகியுள்ளது.
நீ ஏன் சந்திரமுகியா மாறுற? - ஜோதிகாவின் ஜாக்பாட் செம காமெடி வீடியோ வீடியோ