சூர்யாவுக்காக குரல் கொடுத்த விஜய்டிவி 'சின்ன மச்சான்' செந்தில் கணேஷ்! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற செந்தில் கணேஷ், அதன்பிறகு திரையுலகில் பல படங்களில் பாடல்கள் பாடி வருகிறார் என்று தெரிந்ததே. அது மட்டுமன்றி ஒரு சில படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார்

Suriya's Soorarai Pottru Song Sung Vijay Tv Senthil Ganesh

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் ஒரு படத்தில் பாடல் ஒன்றை அவர் பாடி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம் சூர்யா தற்போது நடித்து வரும் 'சூரரைப் போற்று' என்ற படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

செந்தில் கணேஷ் பாடிய பாடல் என்றாலே தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் மேலும் ஜாக்கி ஷெராப்,பரேஷ் ராவல், கருணாஸ், மோகன் பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.