சூப்பர் ஸ்டாரின் ’தர்பார்’ படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆஃபிஸ் கலக்ஷன் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 11:01 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த படம் சென்னை சிட்டியில் மட்டும் ரூ.7.41 கோடி (தோராயமாக ரூ. 7,41,06,808) வசூலித்துள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 4 நாட்களின் முடிவில் உலக அளவில் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது
Here's the Worldwide Box-office collections of #DARBAR
— Lyca Productions (@LycaProductions) January 13, 2020
"Anyone can play the game, but the throne always belongs to the EMPEROR 👑"@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarPongal #DarbarBlockbuster pic.twitter.com/f2z0MGlzVv