darbar USA others

தனுஷ், வெற்றிமாறன் குறித்து எமோஷனலான பேச்சு - ''நீ நடிச்ச படம் நல்லா இல்ல..., சரியா போகலனு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி  வெளியான படம் 'அசுரன்'. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

Dhanush Speaks about Asuran and Director Vetrimaaran

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் பெரும் பலம் சேர்த்திருந்தது. இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி, கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், அம்மு அபிராமி, பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படம் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பேசிய தனுஷ், ''நமக்கு பெருசா நண்பர்கள் கிடையாது. மிகவும் குறைவு தான். 1000 நண்பர்கள் நம்ம கிட்ட ஏதோ எதிர்பார்த்து கூட இருக்கிறத விட, ஒரு நண்பர் நீ நடிச்ச படம் நல்லா இல்ல, சரியா போகல, இல்ல சரியா போகுதுனு சொல்ற நபர் இருந்தா போதும். அந்த மாதிரி ஒரு நண்பர் வெற்றிமாறன்'' என்றார்.

தனுஷ், வெற்றிமாறன் குறித்து எமோஷனலான பேச்சு - ''நீ நடிச்ச படம் நல்லா இல்ல..., சரியா போகலனு...'' வீடியோ

Entertainment sub editor