அதிர்ச்சி! 'சூப்பர் மேன்' படங்களின் பிதாமகன் 'ரிச்சர்ட் டோனர்' திடீர் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போதைய சூப்பர் மேன் படங்களுக்கு முன்னோடியான படங்களான, சூப்பர் மேன் படத்தின் 2 பாகங்களையும், இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் டோனர். 

Super man movie director Richard Donner passes away

த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 91. ரிச்சர்ட் டோனரின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1961 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ரிச்சர்ட் டோனர், 1961-ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்-15 என்கிற படத்தினை இயக்கியிருந்தார். பின்னர் 1968 இல் சால்ட் அண்ட் பெப்பர் எனும் படத்தை இயக்கினார். 1976ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெற்றி பெற்றது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் 4-வதாக அவர் இயக்கிய படம்தான் ‘சூப்பர்மேன்’.

இந்நிலையில் இவரது மறைவை அடுத்து, உலகம் முழுவதும் இருக்கும் உலக சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ALSO READ: நடிகர் திலீப்குமார் மரணம்!.. 'பெரும் சோகத்தில்' மூழ்கிய பாலிவுட் திரையுலகம்!

Super man movie director Richard Donner passes away

People looking for online information on Richard Donner, Super man will find this news story useful.