நடிகர் திலீப்குமார் மரணம்!.. 'பெரும் சோகத்தில்' மூழ்கிய பாலிவுட் திரையுலகம்!
முகப்பு > சினிமா செய்திகள்பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 98.
![veteran bollywood actor dilip kumar dies at 98 RIP veteran bollywood actor dilip kumar dies at 98 RIP](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/veteran-bollywood-actor-dilip-kumar-dies-at-98-rip-photos-pictures-stills.jpg)
முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்த திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான்.
கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய், நிமோனியா என பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலீப் குமார், கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக ஜூன் 6-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆக்ஸிஜன் உதவியுடன் அவரது உடல்நிலை சீராக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே வரும் டிசம்பரில் 99-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் தற்போது திலீப் குமார் காலமானார். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.