இந்த பிரபல காமெடி படத்தை கைப்பற்றிய சன் டிவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Sun Tv acquires satellite rights of Yogi Babu's Dharma Prabhu

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு எமனாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. எமலோகத்தில் எமன் பதவி தேர்தல் நடப்பதையும், அதற்காக போட்டியிடும் எமன் வாரிசான யோகிபாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுவதும், அதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது. ‘பேட்ட’, ‘சர்கார்’, ‘தளபதி 63’ திரைப்படங்களின் வரிசையில் தற்போது யோகிபாபுவின் திரைப்படத்தின் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுவிதமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூன்.28ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.