சிம்புவின் ‘மாநாடு’ படம் குறித்த அதிரடி Exclusive அப்டேட்!!!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 11:48 AM
பல தடைகளுக்கு பிறகு சிம்பு – வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு திரைப்படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. முதற்கட்ட வேலையாக படத்தின் கம்போசிங் வேலையை இயக்குநர் வெங்கட்பிரபு – யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து தொடங்கி உள்ளார்.
![STR Simbu Maanaadu Shooting Venkat Prabhu Yuvan Shankar Raja Aravind Swamy announcement date STR Simbu Maanaadu Shooting Venkat Prabhu Yuvan Shankar Raja Aravind Swamy announcement date](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/str-simbu-maanaadu-shooting-venkat-prabhu-yuvan-shankar-raja-aravind-swamy-announcement-date-photos-pictures-stills.jpg)
வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பொங்கலை முன்னிட்டு மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் கலைஞர்கள், ஷூட்டிங் விவரங்களை அறிவிக்கப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்னதாகவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. தற்போது மாநாடு பட ஷூட் குறித்த விவரங்கள் வரும் ஜனவரி 16ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இறுதியாக சிம்புவை சுந்தர் சி இயக்கிய ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் பார்த்த ரசிகர்கள் மாநாடு படத்துக்கான அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.