RRR Others USA
www.garudabazaar.com

தெலுங்கு சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன்! பலமான கூட்டணியோடு வெளியான OFFICIAL VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைள்ளார்.

SK20 Sivakarthikeyan Telugu Tamil Bilingual Movie Announced

தெலுங்கில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

'வலிமை' படத்தின் படு மிரட்டலான புதிய லுக் போஸ்டர்! எப்படி இருக்கு தெரியுமா?

SK20 Sivakarthikeyan Telugu Tamil Bilingual Movie Announced

லண்டனில் இருந்து பாண்டிச்சேரி

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் இசை இயக்குனர் தமன் டிவிட்டரில் டிவீட் செய்து ''உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை உறுதி செய்யும் விதமாக இன்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் டிவிட்டரில் அறிவிப்பு  வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில் புறா ஒன்று லண்டனில் இருந்து பாண்டிச்சேரிக்கு வருவது போல் உள்ளது. எனவே லண்டனில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பெண்ணுக்கும் கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் சம்பவம் படமாக இருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது.

SK20 Sivakarthikeyan Telugu Tamil Bilingual Movie Announced

நடிகர் மோகன் ரீ என்ட்ரி! தமிழ் சினிமாவில் மீண்டும் ஹிரோவாக! போஸ்டருடன் வெளியான செம அப்டேட்!

SK20 Sivakarthikeyan Telugu Tamil Bilingual Movie Announced

சிவகார்த்திகேயன் - சத்யராஜ் - பிரேம்ஜி

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சூரி, சதீஷ் ஆகியோரிடம் இணைந்து படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக தெலுங்கு - தமிழில் உருவாகும் இந்த படத்தில் பிரேம்ஜியுடன் நடிக்க இருப்பது கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், கனா படத்தில் நடித்திருந்தாலும் இருவர்க்கும் சேர்ந்த காட்சிகள் இல்லை. சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில், டி. இமான் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தான் கடைசியாக சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் தோன்றினார்.

தொடர்புடைய இணைப்புகள்

SK20 Sivakarthikeyan Telugu Tamil Bilingual Movie Announced

People looking for online information on Anudeep, சிவகார்த்திகேயன், தெலுங்கு தமிழ், பிரேம்ஜி, Premji amaren, Sathyaraj, Sivakarthikeyan, SK 21, SK20, Tamil Telugu Bilingual will find this news story useful.