www.garudabazaar.com

"வாலி படத்துக்கு கதை சொல்லிய நாட்கள்".. நடிகர் அஜித் தந்தை மறைவு.. SJ சூர்யாவின் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SJ Surya condolence to demise of Ajith Father subramaniyan

Also Read | நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

அஜித் குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

சோகம்

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

SJ Surya condolence to demise of Ajith Father subramaniyan

இரங்கல்

மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா, அருண் விஜய் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.  பின்னர் உடலானது தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக நடிகர் அஜித் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஏ. எல். விஜய், மகிழ் திருமேனி, லைகா தமிழ் குமரன், பார்த்திபன், நடிகர் பிரசன்னா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

SJ Surya condolence to demise of Ajith Father subramaniyan

SJ சூர்யா

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான SJ சூர்யா அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில்,"RIP ஐயா, 'வாலி' கதை சொன்ன நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது, ஐயா அஜீத் சாருடன் அமர்ந்து என் கதையை ரசித்தார். ஆல்வேஸ் லவ் யூ ஐயா. அம்மா, அஜித் சார், ஷாலினி மேம் & குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு.. சிம்புவின் உருக்கமான இரங்கல் பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

SJ Surya condolence to demise of Ajith Father subramaniyan

People looking for online information on Ajith Father subramaniyan, Ajith Kumar, Ajith Kumar Father PS Mani Funeral, Sj suryah will find this news story useful.