Reliable Software
www.garudabazaar.com

ஷிவாங்கி Plan பண்ணி அஷ்வினுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்... போட்டு உடைத்த நண்பர்கள்... செம கியூட்ல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியின் இந்த சீசனை ஷிவாங்கி, அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

sivaangi's surprise plan to ashwin in CWC ஷிவாங்கி அஷ்வினுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு மில்லியன் Follower-களை எட்டியுள்ள நிலையில் அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், குக் வித் கோமாளி போட்டியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் நீண்டகாலமாகவே அஸ்வின் திரைத்துறையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மிகப்பெரிய பிரேக்கிங் ஆக அமைந்துள்ளது. தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாவதற்கு முன்பு, துல்கர் சால்மான் நடித்த இயக்குனர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' மற்றும் துருவ்வின் 'ஆதித்ய வர்மா' படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சில மாதங்கள் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படி பல கஷ்டங்களை தாண்டி அஸ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு மிகப் பெரிய பிரேகிங்க்காக அமைந்துள்ளது. இந்நிலையில் அவருக்காக ஷிவாங்கி Plan செய்த சர்ப்ரைஸ் ஒன்றை தற்போது அவரது நண்பர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அஸ்வின் 'காதல் ஒன்று கண்டேன்' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணு வீசி' என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளியிள் ஒரு நாள் போட்டியில் வென்ற பிறகு ஷிவாங்கி அவருக்காக அந்த பாடலை டெடிகேட் செய்தார். அதன்பிறகு அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகத் துவங்கியது. இந்த பிளானை முன்பே அஸ்வின்  நண்பர்களிடம் பகிர்ந்து உள்ளார் என்பதும் தற்போது வெளியாகியுள்ளது.

ஷிவாங்கி PLAN பண்ணி அஷ்வினுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்... போட்டு உடைத்த நண்பர்கள்... செம கியூட்ல..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sivaangi's surprise plan to ashwin in CWC ஷிவாங்கி அஷ்வினுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

People looking for online information on Ashwin, Sivaangi will find this news story useful.