Reliable Software
www.garudabazaar.com

அஷ்வின் தான் Cook with Comali டைட்டில் வின்னரா? Viral ஆகும் ஆரவாரமான ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனின் கடைசி ஷூட்டிங் தளத்தில் இருந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் வெளியிட்ட உருக்கமான பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

Is Ashwin the title winner of cook with comali 2 அஷ்வின்

புகழ், அஷ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, கனி, பவித்ரா, ஷகிலா, மணிமேகலை, சரத், பாலா, பாபா பாஸ்கர், சுனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி சீசன்-1ஐ விடவும் வேற லெவலில் வைரலாகிவிட்டது. ரியாலிட்டி டிவி ஷோக்களில் மிக முக்கியமான ஷோவாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளதற்கு இந்த 2வது சீசனின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம்.

குறிப்பாக இந்த சீசனில் பாடகி சிவாங்கி, நடிகர் அஷ்வின், நடிகை பவித்ரா கலக்கப்போவது யாரு பாலா மற்றும் புகழ் என பலரும் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி வருகின்றனர். குறிப்பாக சிவாங்கியும் புகழும் அண்ணன் தங்கையாகவும், சிவாங்கியும் அஷ்வின் க்யூட் க்ரஷ் காம்போவாகவும் வைரலாகியுள்ளனர். இதில் புகழ் விஜய் சேதுபதியின் 46வது படம் உள்ளிட்ட சில படங்களிலும் சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஷ்வின் ஜெயிக்க வேண்டும் என அஷாங்கி ரசிகர்கள், அதாவது அஷ்வின் - சிவாங்கி ரசிகர்கள் விரும்பவே செய்கின்றனர். இன்னொருபுறம் மாறாத உழைப்பை போட்டுள்ள கனி, அவரைத் தொடர்ந்து பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா என யார் ஜெயிப்பார்கள் என்பதை குக் வித் கோமாளிகள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே அஷ்வின் அல்லது கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. எனினும், அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் ஜெயித்தாலும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

Is Ashwin the title winner of cook with comali 2 அஷ்வின்

இதனிடையே அஷ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஆரவாரமான ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

ALSO READ: "10 வருஷமா இதுக்காக ஏங்கினேன்.. இப்ப தான்!".. அழுது தீர்த்த சுனிதா.. பிரியங்கா நெகிழ்ச்சி பதிவு!

அஷ்வின் தான் COOK WITH COMALI டைட்டில் வின்னரா? VIRAL ஆகும் ஆரவாரமான ஃபோட்டோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is Ashwin the title winner of cook with comali 2 அஷ்வின்

People looking for online information on Ashwin, CookWithComali, CookWithComaliSeason2, Kani, VijayTelevision will find this news story useful.