www.garudabazaar.com

"இன்னைக்கு தான் கடைசி நாள்"!.. சிவாங்கி என்ன படிக்கிறார்? எந்த கல்லூரி? தீயாய் பரவும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது.

Sivaangi last day UG viral trending pic சிவாங்கி

விஜய் டிவியில் சீரியல் ஒளிபரப்பாகி வந்த போதே அந்த சேனலுக்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிலையில் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பின்னாளில் உண்டாகினர். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் பிக்பாஸ் அறிமுகமானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மிகவும் சென்சேஷனலான நிகழ்ச்சியாக மாறிப்போனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. நகைச்சுவையும் பொழுதுபோக்கும் என ஜனரஞ்சகமாக களைகட்டிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் அனைவராலும் வரவேற்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் கார்டு வென்றார் கனி.

இந்த இரண்டாவது சீசன் மூலம் புகழ், சிவாங்கி, அஸ்வின் உள்ளிட்டோர் இன்னும் பிரபலமடைந்தனர். இதில் சிவாங்கி விஜய் டிவியில் பாடகராக அறியப்பட்டவர். இந்நிலையில் சிவாங்கி தமது இளங்கலை படிப்பின் கடைசி நாள் இன்றுதான் என  கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதன்படி சிவாங்கி பிரபல கல்லூரியில் B.Com படித்து வந்துள்ளார். இந்த 3 வருட படிப்பின் கடைசி நாள் இதுதான் என்பதை குறிக்கும் படிவம் ஒன்றை சிவாங்கி தமது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

பிரபல பாடகரான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி தற்போது கவின் நடித்த அஸ்கு மாரோ என்னும் ஆல்பம் பாடலில் பாடி நடித்துள்ளார். அத்துடன் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அண்மை செய்தியாக வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்ததாக தமிழில் உதயநிதி நடிப்பில் தயாரிக்கும் ஆர்டிகள் 15 படத்தில் சிவாங்கி நடிக்கிறார் என போனி கபூர் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ALSO READ: வாணி போஜன் கைகளில் டஜன் படங்களா?.. தெரியவந்த செம்ம அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi last day UG viral trending pic சிவாங்கி

People looking for online information on CookWithComali2, Sivaangi, Trending will find this news story useful.