Reliable Software
www.garudabazaar.com

மேடையில் அஸ்வினுடன் சேர்ந்து பாடிய ஷிவாங்கி... என்ன பாடல் பாருங்க... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. அந்த வகையில் குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு ரசிகர்கள் ஏராளம். பொது இடங்களுக்கு செல்லும் பொழுது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய பிரேக்கிங் அமைந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு பல கடினமான சூழல்களை அவர் கடந்து வந்துள்ளார் என்பது அவர் பேசும் போது தான் தெரிகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக Most Popular Person of Reality Television - Female  என்ற Behindwoods Gold Icon விருதினை அவர் பெற்றுள்ளார்.

sivaangi and ashwin singing together அஸ்வினுடன் சேர்ந்து பாடிய ஷிவாங்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியின் இந்த சீசனை ஷிவாங்கி, அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைந்துள்ளது.

குறும்புக்கு பெயர் போன ஷிவாங்கி மேடையில் செய்த சேட்டைகள் ரசிக்கும்படி இருந்தது. மேலும் ஷிவாங்கி அஸ்வின் இருவரும் சேர்ந்து பாடல் பாட ரசிகர்களுக்கு செம டிரீட்டாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேடையில் அஸ்வினுடன் சேர்ந்து பாடிய ஷிவாங்கி... என்ன பாடல் பாருங்க... செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sivaangi and ashwin singing together அஸ்வினுடன் சேர்ந்து பாடிய ஷிவாங்கி

People looking for online information on Ashwin, Sivaangi will find this news story useful.