Reliable Software
www.garudabazaar.com

சிம்பு, ஹன்சிகாவின் மஹா படத்துக்கு கோர்ட் தடையா? தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்பில் உருவாகியுள்ள   “மஹா” திரைப்படத்தின் வெளியீடு குறித்து சில தவறான தகவல்கள் மக்களிடத்திலும் ஊடகங்கள் இடையையும் உலா வருவதாக குறிப்பிட்டுள்ள எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மஹா படத்துக்கு தடை செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இது குறித்தான உண்மை தகவல்களை வெளியிட கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Simbu Maha movie productions explain over court order

அதன்படி, “மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியீட்டிற்கு முழுமையான நிலையில் தயாராக உள்ளது. இயக்குநர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது சில குற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் தரப்பின் சார்பில், தயாரிப்புத் தரப்பு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 13/05/2021 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில்  மஹா  படத்தின் மீது உயர் நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. உயர்நீதி மன்றம் சார்பில் வழக்கு குறித்து இயக்குநர் தரப்பு வழக்கறிஞர் வாயிலாக சட்ட பூர்வ அறிவிப்பு கடிதம் பெறப்பட்டது. அதில் வழக்கின் முறையான அடுத்த விசாரணை 19/05/2021 நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ: ஹீரோயினாக முதல் பட டப்பிங்கில் குக் வித் கோமாளி தர்ஷா!! உற்சாக Post.. குஷியில் Fans!

இவ்வழக்கின் பொருட்டு எங்கள் தரப்பில், உடனடியாக வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாயிலாக பதில் பிரமாண பத்திரம் 18/05/2 021 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு விசாரணை 19/05/2019 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  மஹா படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றம், ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. மேற்கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மஹா படத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. மேற்கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று வரை  மஹா படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை என்பதே உறுதியான தகவலாகும்.

Simbu Maha movie productions explain over court order

இயக்குநர் தரப்பில் இருந்து தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், எங்கள் தரப்பில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உறுதியான முடிவிற்காக காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பொதுவான காலத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை, கருத்தில் கொண்டு மஹா படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

Simbu Maha movie productions explain over court order

இதன்பொருட்டு நடிகர் சிம்பு நடிகை, ஹன்சிகா மோத்வானி ஆகியோரின் தீவிர ரசிகர்கள் தற்போதைய நிலையை புரிந்து கொண்டு  மஹா  படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டை திட்டமிட இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  அனைவரும் உடல் நலத்தைப் பேணி, பாதுகாப்புடன் இருங்கள். பொதுவெளியில் கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுங்கள். பொது மனித இடைவெளியை அனைவரும் கடைபிடியுங்கள்!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: "கோச்சுகிட்டு கடவுள் கிட்ட போயிட்டீங்களா அம்மா?".. தாயைப் பறிகொடுத்த பிரபல பி.ஆர்.ஓ உருக்கம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Maha movie productions explain over court order

People looking for online information on Etcetera Entertainment, Maha, Silambarasan TR, U R Jameel will find this news story useful.