"கோச்சுகிட்டு கடவுள் கிட்ட போயிட்டீங்களா அம்மா?".. தாயைப் பறிகொடுத்த பிரபல பி.ஆர்.ஓ உருக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார்ஸ் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும் நடிகர்களின் மக்கள் தொடர்பாளராகவும், பிரபல ஊடகவியலாளராகவும் வலம் வருபவர் ரியாஸ் அஹமது.

இந்நிலையில் தான் ரியாஸ் அஹமதுவின் தாயார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் ரியாஸ் அஹமதி நெஞ்சை உருக்கும் பதிவாக நடந்தது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், “என்ன ஹாஸ்பிடல்லே இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போ , நான் ரூம்ல தனியா இருந்து என்ன பாத்துகிரேன்னு சொன்னீங்க". "நீங்க சீகர்மா குணமாயிடுங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். என்மேல கோவிச்சுகிட்டு வீட்டுக்கு வராமே கடவுள் கிட்டிய போடீங்களா அம்மா . என்ன மண்ணிசிடுங்க” என ரியாஸ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் அண்மையில் பலரும் கொரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட பலவிதமான காரணங்களால் உயிரிழந்து வந்த சம்பவங்கள் திரைத்துறையை மட்டுமல்லாது பலரிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவினர்களும் காலமாகி வரும் நிகழ்வுகள் இன்னும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
" என்ன ஹாஸ்பிடல் லே இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போ , நான் ரூம்ல தனியா இருந்து என்ன பாத்துகிரேன்னு சொன்னீங்க". நீங்க சீகர்மா குணமாயிடுங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். என்மேல கோவிச்சுகிட்டு வீட்டுக்கு வராமே கடவுள் கிட்டிய போடீங்களா அம்மா .
என்ன மண்ணிசிடுங்க 🙏 pic.twitter.com/yf7w4dGYYK
— RIAZ K AHMED (@RIAZtheboss) May 21, 2021
அந்த வகையில் அண்மையில் இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ்.முத்துலக்ஷ்மி சென்னையில் இயற்கை மரணம் அடைந்தார். இதேபோல் கங்கை அமரனின் மனைவியும் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் தாயாருமான மணிமேகலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தன் மனைவி சிந்துஜாவை இழந்தார். ஆம், கொரோனா காரணமாக சிந்துஜா மரணம் அடைந்தார். இந்நிலையில் ரியாஸின் தாயார் மரணம் அடைந்த செய்தியை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.