’சிம்பு, ஜி.வி.பிரகாஷ் ஒரே படத்தில்…’ – புதுப்பட பாடல் குறித்த நியூ அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் உருவாகும் திரைப்படம் ’மாயன்’. இதில் வினோத் மோகன் நாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர், சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன் இதிலும் நாயகியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கெனவே வெளியிட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை ரஜேஷ் கண்ணா இயக்குகிறார். இவர் இதற்கு முன்னால் சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கிய நாம் ஒருவர் நிகழ்ச்சியை இயக்கியவர் ஆவார்.
இந்நிலையில் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குரலில் ஒரு பாடல் பதிவாகி உள்ளது. இந்த படத்துக்காக சிம்பு, அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் ஆளுக்கு ஒரு பாடல் பாடியுள்ளனர்.
Tags : Simbu, GV Prakash, Arunraja Kamaraj