இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் போது தவானுக்கு கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.
தவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை (13.06.2019) அன்று நியூசிலாிந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதவிருக்கிறது. இந்த போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக யார் ஓபனிங் இறங்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
மேலும் இதுகுறித்து சமூகலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "கையில் அடிப்பட்டிருந்தும் அவர் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிப்பார் என்பது நம்பமுடியாததாக இருக்கிறது.
தவான் மீண்டுவருவார்என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நடக்காத நிலையில் கேஎல் ராகுல் இந்தியாவின் ஓபனிங் இறங்குவதற்கு முழுத் தகுதியானவர். இது இந்திய அணிக்கு பலத்தை அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
Really hope @SDhawan25 comes back from this... In the worst case, @klrahul11 is a highly capable opener in his place. There's good safety and bench strength in our squad. #CWC19 https://t.co/DZRsHoEgW9
— Siddharth (@Actor_Siddharth) June 11, 2019