#BREAKING : விஜய்யின் மாஸ்டருக்கு பிறகு தியேட்டரில் இந்த படம்தான்.. டக்கரான தகவல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு பிறகு வெளியாக போகும் படம் குறித்த பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது.

சித்தார்த்தின் டக்கர் ரிலீஸ் தகவல் | siddarth and kappal director karthik krish's takkar movie to be released after master.

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டக்கர். கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி க்ரிஷ் இத்திரைப்படத்தை இயக்குகியுள்ளார். திவான்ஷா கௌஷிக் கதாநாயகியாகவும், யோகிபாபு, முனிஸ்காந்த் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஏற்கனவே டக்கர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் டக்கர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை ஏப்ரல் 17 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 17 அன்று சித்தார்த்தின் 40-வது பிறந்தநாள் வருவதால், அன்றே படத்தை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம், ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Entertainment sub editor