'டைரக்டர் லோகேஷை நம்புங்க' - நடிகர் விஜய்யின் 'தளபதி 64' பட நடிகர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநகரம்', 'கைதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Shanthanu shares a selfie with Thalapathy Director Lokesh Kanagaraj

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், சேத்தன், அழகம் பெருமாள், சுனில் ரெட்டி, கௌரி கிஷண் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சாந்தனு இயக்குநர் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அதில், கீப் காம், லோகேஷை நம்புங்க என்று பதிவிட்டுள்ளார்.