“கப்பு முக்கியம் பிகிலு...!” ராயப்பனின் எமோஷனல் Moment - பிகில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பன் மற்றும் பிகில் நடித்துள்ள காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Rayappan's emotional scene from Thalapathy Vijay's Bigil sneak Peek video released

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதுடன், பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில், மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்தில் இருந்து ராயப்பனும், பிகிலும் நடித்துள்ள எமோஷனல் காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

“கப்பு முக்கியம் பிகிலு...!” ராயப்பனின் எமோஷனல் MOMENT - பிகில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ! வீடியோ