www.garudabazaar.com

ப்பா...மாஸ்.. இயக்குநர் செல்வராகவன் எப்படி மாறிட்டாரு பாருங்க.. தீயாய் பரவும் "ஒற்றை ஃபோட்டோ"..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 15, பிப்ரவரி 2022: இயக்குனர் செல்வராகவன் தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

Selvaraghavan mass physic viral recent photo செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் பெரும் ஹிட் அடித்ததுடன் இவற்றுள் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

Also Read: நாயகனை 'அலேக்கா' தூக்கிகிட்டு கோயில் படி ஏறினாரா ‘முத்தழகு’ நாயகி?  உண்மையில நடந்தது இதான்  .. வைரல் ஆகும் BTS Video

பார்ட் -2 எப்போ வரும்?

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படங்களின் தொடர்வரிசை திரைப்படங்களும் வருவதாக, அதாவது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்கள் குறித்த அப்டேட்களை செல்வராகவனிடத்தில் இருந்து ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

‘நானே வருவேன்’

இதனிடையே தனுஷ் நடிப்பிலான, ‘நானே வருவேன்’ திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்ததை அண்மைக் காலங்களில் காண முடிந்தது. முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கடந்த வருடங்களில் வெளியாகியிருந்தது.

நெஞ்சம் மறப்பதில்லை

ஹாரர் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில், செல்வராகவன் கையாண்ட தன் பாணியிலான திரைமொழியும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் அபாரமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து செல்வராகவன் நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார் என்பதுதான் அண்மைக் காலங்களில் மிகவும் ட்ரெண்டாகி வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

சாணிக் காயிதம்

அதன்படி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் செல்வராகவன் நடிகராக நடிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன், தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் தற்போது வெளியகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த திரைப்படத்தில் செல்வராகவன் நடிக்கும் நிலையில், அவருடைய ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கம்பீரமாக..

ஆம், இந்த ஃபோட்டோவில் இயக்குநர் செல்வராகவன் கட்டுமஸ்தான உடலுடன் கம்பீரமாக நிற்கிறார். இந்த ஃபோட்டோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி, வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும், இதற்கு முன்பாக செல்வராகவனின் உடல் தோற்றம் இப்படி இருந்ததில்லை.

இப்போது அவரைப் பார்க்கும்போது நமக்கு இன்னும் பெரும் தன்னம்பிக்கை வருகிறது, செம கெத்தாக இருக்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: ‘கண்ணே கலைமானே’ கமல் வெர்ஷன்.. BiggBoss-ல உருக வெச்சுட்டாருப்பா.. தீயாய் பரவும் ஆடியோ க்ளிப்

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan mass physic viral recent photo செல்வராகவன்

People looking for online information on Arabic Kuthu, Arabic Kuthu Single, Beast, Beast Arabic Kuthu, Dhanush, Naane Varuven, Selvaraghavan, Selvaraghavan new pic, Selvaraghavan new viral pic, Selvaraghavan viral photo will find this news story useful.