சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்த சீமான், அதுகுறித்து பதிவிட்டிருப்பதோடு இயக்குநரையும் பாராட்டியுள்ளார்.
![seeman praises tamil movie of a women director seeman praises tamil movie of a women director](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/seeman-praises-tamil-movie-of-a-women-director-news-1.jpg)
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சில்லுக்கருப்பட்டி படம் வெளியானது. பூவரசம் பீப்பி படத்தை எடுத்து ஹலிதா ஷமீம் இத்திரைப்படத்தை இயக்கினார். அன்பு என்ற ஒன்றை மையமாக வைத்து நான்கு தனிக்கதைகளை தொகுத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. சமுத்திரகனி, சுனைனா, மனிகண்டம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நெடுநாட்களுக்கு பிறகு தமிழில் வந்த ஒரு நல்ல ஃபீல்-குட் படம் என்பதால், சில்லுக்கருப்பட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தை பார்த்த பலரும் இயக்குநர் ஹலிதா ஷமீமை பாராட்டியவன்னம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பார்த்தேன். 'தித்திப்பு'. இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்' என தெரிவித்துள்ளார். சீமானின் பாராட்டை கண்ட இயக்குநர் ஹலிதா, 'அளவற்ற மகிழ்ச்சி அண்ணா. அன்பும், நன்றியும் என பதிவிட்டுள்ளார்.
அளவற்ற மகிழ்ச்சி, அண்ணா! 🙏🏼 #அன்பும் நன்றியும்! 😊 https://t.co/REqekcpgeU
— Halitha (@halithashameem) January 31, 2020