''Bigg Boss தர்ஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டாரு'' - சனம் ஷெட்டி பரபரப்பு புகார்
முகப்பு > சினிமா செய்திகள்அம்புலி', 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் சனம் ஷெட்டி. இவரும் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3யின் பிரபல போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளாராம். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், ''எனக்கும் பிக்பாஸ் தர்ஷனுக்கு மே 12 நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் தர்ஷன், ''நான் பிக்பாஸ் போய்ட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன்னா நான் கல்யாணம் பண்ணிட்டு பிக்பாஸ் போனா எனக்கு பெண் ரசிகைகள் குறஞ்சுடுவாங்கனு சொன்னார்.
அவங்களுக்கு பிக்பாஸ் அப்ளிகேஷன் அனுப்பியதே நான் தான். அவருக்காக இதுவரை ரூ.15 லட்சம் செலவு பண்ணிருக்கேன். பிக்பாஸ் போய்ட்டு வந்ததும் தர்ஷன் மாறிட்டாரு. பேசணும்னு முயற்சி செய்த பொழுது என்னை அவமானப்படுத்தினார்.
தர்ஷன் பெற்றோரும் எனக்கு உதவி பண்ணல.அதனால அவர் மேல சீட்டிங், ஃபிராடு, பெண்ணை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார். பின்னர் நிச்சயதார்த்த புகைப்படம், கல்யாண பத்திரிக்கைகளை பத்திரிக்கையாளர்கள் முன்பு காண்பித்தார்.
''BIGG BOSS தர்ஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டாரு'' - சனம் ஷெட்டி பரபரப்பு புகார் வீடியோ