“நித்தியானந்தாவின் கைலாசா போக விசா வேணும்..!”- கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு சதீஷ் செம கலாய்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 04, 2019 12:13 PM
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ நாடு குறித்த இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்டிற்கு நடிகர் சதீஷ் தனக்கே உரிய பாணியில் செம கலாயாக ஒரு பதில் கூறியுள்ளார்.
![Sathish reply to Cricketer Aswhwin's comment on Nithyananda's Kailasa Visa Procedure Sathish reply to Cricketer Aswhwin's comment on Nithyananda's Kailasa Visa Procedure](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sathish-reply-to-cricketer-aswhwins-comment-on-nithyanandas-kailasa-visa-procedure-news-1.jpg)
பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகள் கடத்தல் என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா, தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஈகுவேடார் அருகே தனித்தீவு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ள நித்தியானந்தா, 'நித்தியானந்தா கைலாசா' என்று பெயர் சூட்டி இந்துக்களுக்கான தனி நாடாக அறிவித்துள்ளார்.
இந்த நாட்டுக்கென்று தனி கொடி, பாஸ்போர்ட், மொழி ஆகியவற்றையும் நித்தியானந்தா உருவாக்கி உள்ளதாகவும், நித்தியானந்தாவே இந்த நாட்டிற்கு பிரதமராக இருப்பதாக அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்திகளும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்தரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கைலாசா’ நாட்டிற்கு செல்ல விசா வாங்க என்ன செய்ய வேண்டும்..? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு காமெடி நடிகர் சதீஷ் செம கலாயாக பதில் கூறியுள்ளார்.
அவரதுட்வீட்டில், ‘சொல்கிறேன் பக்தா..’ என்ற கேப்ஷனுடன் ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் நித்தியானந்தா கெட்டப்பில் சதீஷ் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Solgiren Bhaktha 🤓 pic.twitter.com/kshB4Ejzro
— Sathish (@actorsathish) December 4, 2019