''Red Alert மழை வரப்போகுதுனு கொடுக்கிறீங்களா, இல்ல...'' - நடிகர் சதிஷ் கலாய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 02, 2019 10:40 AM
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Actor Sathish comments about meteorological department's Red alert Actor Sathish comments about meteorological department's Red alert](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-sathish-comments-about-meteorological-departments-red-alert-photos-pictures-stills.jpg)
நடிகர் சதீஷ் அவ்வப்போது பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கருத்து கூறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக தமிழத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''Red alert மழை வர போகுதுனு மக்களுக்கு குடுக்குறீங்களா... இல்ல வராதேனு மழைக்கு குடுக்கறீங்களா... சொன்ன உடனே நின்னு போச்சு'' என கருத்து தெரிவித்துள்ளார்.
Red alert மழை வர போகுதுனு மக்களுக்கு குடுக்குறீங்களா... இல்ல வராதேனு மழைக்கு குடுக்கறீங்களா... சொன்ன உடனே நின்னு போச்சு 😬😬
— Sathish (@actorsathish) December 1, 2019