Udanprape others
www.garudabazaar.com

சசிகுமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்.. மாஸாக வெளியான ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து முத்திரை பதித்து வருபவர் சசிகுமார்.

Sasikumar MGR Magan Sathyaraj OTT release announcement official

அண்மையில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது. ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இரா.சரவணன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிருணாளினி ரவி மற்றும் பலர் நடித்த ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பில் சசிகுமார் மற்றும் சத்யராஜ் இடம்பெறும் போஸ்டருடன், “உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா, உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா” என்கிற கேப்ஷனுடன் வெளியாகியுள்ளது. மேற்படி படம், வரும் நவம்பர் 4-ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "போடு.. போடு!!".. வேறலெவல் கேரக்டர் பெயர் .. பிரபாஸின் ராதே ஷ்யாம் டீசர் குறித்த மாஸ் அப்டேட்!

Sasikumar MGR Magan Sathyaraj OTT release announcement official

People looking for online information on M Sasikumar, Sathyaraj will find this news story useful.