www.garudabazaar.com

தமனின் அடுத்த மாஸ் சம்பவம் ரெடி! இந்த முறை சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கூட.. செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார்.

Sarkaru Vaari Paata 1st Single Will Be Out On February 14th

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்படப் போகும் முன்னணி வீரர் இவர் தான்! ரசிகர்கள் சோகம்! எப்பேர்ப்பட்ட ப்ளேயர்...

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

Sarkaru Vaari Paata 1st Single Will Be Out On February 14th

சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ரொமாண்டிக் பாடல் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sarkaru Vaari Paata 1st Single Will Be Out On February 14th

இந்த படத்தை அடுத்தாண்டு (2022) பொங்கல் மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் இதே பொங்கல் 2022 அன்று ராதே ஷ்யாம், RRR, வலிமை, பீம்லா நாயக் போன்ற பெரிய படங்கள் வெளியாவதால் படத்தின் வெளியீடு ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது.

குட்டி யுவி பொறந்தாச்சு... அப்பாவான உற்சாகத்தில் யுவராஜ் சிங்! அம்மாவான பில்லா பட நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Sarkaru Vaari Paata 1st Single Will Be Out On February 14th

People looking for online information on Mahesh Babu, Parasuram, S Thaman, Sarkaru Vaari Paata, Sarkaru Vaari Patta will find this news story useful.