www.garudabazaar.com

ப்பா… என்னா ஸ்டைலு!- ரசிகர்களக் கவர்ந்த நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.

Samantha latest clicks went viral in social media

மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி… மாமனிதன் ரிலிஸ் அப்டேட் கொடுத்த ஆர் கே சுரேஷ்

அறிமுகம்

சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர் அதே படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக நாக சைதன்யாவுடன் நடித்தார். அந்த படத்தின் வெற்றி அவரை தெலுங்கில் முன்னணி நடிகையாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

முன்னணி நடிகை

ராஜமௌலி இயக்கத்தில் நானியோடு அவர் நடித்த நான் ஈ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து முன்னணி நடிகையாக்கியது. அதன் பிறகு முன்னணி நடிகர்களோடு அவர்   கத்தி, மெர்சல் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2  வெப் தொடர் ஆகியவை அவரை மேலும் முன்னணி நடிகையாக்கின.

Samantha latest clicks went viral in social media

சமந்தாவின் தற்போதைய படங்கள்

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

Samantha latest clicks went viral in social media

சம்ந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருபவர். ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்பவர். இப்படி எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் சமந்தா இப்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. வெள்ளி நிற ஸ்டைலிஷ் உடையில் மின்னும் விளக்கொளியில் இருக்கும் சமந்தாவின் அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் அந்த புகைப்படத்தின் கீழ் தங்கள் கமெண்ட்களை பகிர்ந்துவருகின்றனர்.

Samantha latest clicks went viral in social media

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகிறாரா மொரட்டு சிங்கிள் நடிகர்? செம்ம காம்போ!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha latest clicks went viral in social media

People looking for online information on சமந்தா, Instagram, Samantha, Samantha Latest news, Social Media will find this news story useful.