www.garudabazaar.com

அங்கும் இங்கும் தாவிய நடிகை சமந்தா.. ஜிம் மாஸ்டர் கொடுத்த கஷ்டமான TASK! வைரலாகும் செம வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சியில் ஜிம் மாஸ்டர் ஜூனைத் ஷேக் உடன் ஈடுபட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

samantha gym video with trainer master Junaid Shaikh

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

samantha gym video with trainer master Junaid Shaikh

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

samantha gym video with trainer master Junaid Shaikh

அவ்வப்போது சமூகவலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் ஜிம் பயிற்சியாளர் மாஸ்டர் ஜூனைத் ஷேக் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இரண்டு கைகளையும் தரையில் வைத்து, கைகளை அசைக்காமல் 90 டிகிரிக்கு மேலும் கீழும் தாவும் இந்த உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது. 

 

அங்கும் இங்கும் தாவிய நடிகை சமந்தா.. ஜிம் மாஸ்டர் கொடுத்த கஷ்டமான TASK! வைரலாகும் செம வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

samantha gym video with trainer master Junaid Shaikh

People looking for online information on Gym, Junaid Shaikh, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.