‘கைதி’ பட இயக்குநர் குறித்து பேசிய பிரபல இயக்குநர் S.A.சந்திரசேகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 04, 2019 03:01 PM
பிரபல இயக்குநரான S.A.சந்திரசேகர் இன்றைய தலைமுறை இயக்குநர்களின் பணிகளை கண்டு வியப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் ‘கேப்மாரி’ என்ற ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இயக்குநர் S.A.சந்திரசேகர் இயக்கியுள்ளார். தணிக்கையில் ‘A' சான்றிதழ் பெற்ற இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
இந்நிலையில், இயக்குநர் S.A.சந்திரசேகருடன் நடத்தப்பட்ட உரையாடலில், தற்போதைய இளம் இயக்குநர்களான ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன், கார்த்திக் நரேன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்கள் தன்னை ஈர்த்ததாக தெரிவித்தார்.
மேலும், பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் S.A.சந்திரசேகர், இவர்களது உழைப்பை பார்க்கும் போது ஆர்வமாகவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
S.A.சந்திரசேகர் குறிப்பிட்ட இயக்குநர்களில் ஒருவரான ‘கைதி’ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.