வேற லெவல்..! - ‘கைதி’-யை பார்த்து பிரமித்த ‘தளபதி 64’ டீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தை தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ படக்குழுவினர் பார்த்து ரசித்துள்ளனர்.

Thalapathy 64 team watches director Lokesh Kanagaraj's Kaithi

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தந்தை மகள் பாசத்திற்கு நடுவே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ‘கைதி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் நடிகர் விஜய்யின் ‘தளபதி 64’ திரைப்படக் குழுவினர் ‘கைதி’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளனர்.

கைதி மற்றும் தளபதி 64 இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இசையமைப்பாளர் அனிருத், சாந்தனு ஆகியோருடன் தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்த கதிர் ஆகியோர் படம் பாரத்தனர். இப்படம் வேற லெவலில் இருப்பதாகவும், அடுத்து வரும் தளபதி 64 பெரிதாக எதிர்ப்பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘பேட்ட’ நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் ஆகியோருடன் நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேற லெவல்..! - ‘கைதி’-யை பார்த்து பிரமித்த ‘தளபதி 64’ டீம்! வீடியோ